விக்ரம் வேதா படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து இருந்தவர், ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது நம்பி - தி ராக்கெட்ரி எபெக்ட் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் மாதவன். இதில் சிம்ரன் ஹீரோயின். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி இப்படத்தை மாதவன் உருவாக்குகிறார்.