கால்ஷீட் வேண்டுமா? 2 கண்டிஷன்; பிரபல நடிகை கறார்

கல்லுக்குள் ஈரம் படம் மூலம் அறிமுகமானவர் விஜயசாந்தி. ராஜாங்கம், நெஞ்சிலே துணிவிருந்தால் என பல்வேறு  தமிழ் படங்களில் நடித்தவர் ரஜினியுடன் மன்னன் படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்தார். 1990ம் ஆண்டு போலீஸ் அதிகாரியாக  அவர் நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படம் விஜயசாந்தியை லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது.

இதையடுத்து அவர் அரசியலில் குதித்தார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். சுமார் 12 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ‘சரிலெரு நீகெவ்வரு’ படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இம்மாதம் படம் வெளியாகிறது.

இதையடுத்து விஜயசாந்திக்கு மீண்டும் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்பாளருக்கு அவர் இரண்டு கண்டிஷன்கள் விதிக்கிறார். பெரிய தொகை சம்பளமாக தர வேண்டும், அக்கா, அம்மா, அண்ணி வேடங்களிலும், கெஸ்ட் ரோலிலும் நடிக்க மாட்டேன் கதைக்கு முக்கியத்துவம் மற்றும் தனக்கு முக்கியத்துவமும் உள்ள வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கறாராக கூறிவிடுகிறாராம்.

Related Stories: