ஷ்ரத்தா கபூர், படங்களுடன் விளம்பரங்களிலும் அதிகம் தோன்றுகிறார். பல்வேறு வகை முகப்பொலிவு கிரீம் விளம்பரங்களில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில் விளம்பரத்தில் அவருக்கு செல்லும் வாய்ப்புகள், சாரா அலிகானுக்கு கன்பாம் ஆகிவிடுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், ஷ்ரத்தாவின் வாய்ப்புகளை சாரா திட்டமிட்டு பறிப்பதாக சொல்லப்படுகிறது. பல்வேறு விளம்பர நிறுவனங்களுடன் அப்பா சைப் அலிகான், சித்தி கரீனா கபூர் ஆகியோருக்கு நல்ல தொடர்பு உள்ளது.