டபுள் ஆக்‌ஷன் தனுஷ்

பொங்கலையொட்டி வரும் 9ம் தேதி ரஜினியின் தர்பார் படம் திரைக்கு வருகிறது. அதற்கு ஒரு வாரம் கழித்து அதாவது 16ம் தேதி தனுஷ் நடித்திருக்கும் பட்டாஸ் படம் வெளியாகிறது. இப்படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். மகன் வேடத்தில் வரும் தனுஷுக்கு பட்டாஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தற்காப்பு கலைகளில் பழமையான அடிமுறை என்ற கலை இப்படத்தில் இடம்பெறுகிறது. இதில் சினேகா, மெஹரின் பிர்சடா, நாசர், முனிஷ்காந்த் நவீன் சந்திரா, சதீஷ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். விவேக் மெர்வின் இசை அமைத்திருக் கிறார். ஆர்எஸ்.துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார்.

Related Stories: