கண்களால் வாய்ப்பு பெற்ற பிந்து

அசப்பில் சில்க் ஸ்மிதாபோல் இருந்தாலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் பிந்துமாதவி அடுத்து மாயன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ராஜேஷ் கண்ணா இயக்குகிறார். அவர் கூறும்போது,’தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இப்படம் உருவாகிறது. சிவ பெருமான் மற்றும் மாயன்களை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

வினோத் தமிழ் ஹீரோ. பிந்துமாதவி ஹீரோயின். இப்படத் துக்கு ஊடுருவிபார்க்கும் பவர்ஃபுல்லான கண்கள் தேவைப்பட்டதால் பிந்துமாதவியின் கண்கள் பொருத்தமாக இருந்தது. எனவே அவரை தேர்வு செய்தோம். ஜான் விஜய், கஞ்சா கருப்பு, ராஜசிம்மன், சிவரஞ்சினி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜோன்ஸ் ருபெர்ட் நிரஞ்சன் இசை அமைக்கிறார்’ என்றார் இயக்குனர்.

Related Stories: