நான் கடவுள், அவன் இவன், வேட்டை என பரபரப்பாக இருந்த ஆர்யா திடீரென்று சைலன்ட் மோடுக்குபோய்விட்டார். தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். அதுவும் நடிகை சாயிஷா காதலித்து திருமணம் செய்துகொண்டபிறகு சாயிஷா,ஆர்யா ராசி ஒர்க் அவுட் ஆகி வருகிறது. டெடி, சந்தனத்தேவன் உள்ளிட்ட 3 படங்களில் ஆர்யா நடிக்கிறார். சாயிஷா மனைவியாக வந்தாலும் வந்தார் நிஜ வாழ்க்கையையே சினிமா வாழ்க்கைபோல் மாற்றி அமைத்து கொண்டிருக்கிறார் ஆர்யா.