நடிகர் பிருத்விராஜ் மலையாள திரைப்பட நடிகராக இருந்தாலும் தமிழிலும் ஒரு இடத்தை தனக்கென பிடித்து வைத்திருக்கிறார். மொழி, அபியும் நானும், கண்ணாமூச்சி ஏனடா, நினைத் தாலே இனிக்கும் போன்ற பல படங்களில் நடித்தவர் சமீபகாலமாக மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கம் முதல் நடிப்பில் பிஸியாக இருந்த பிருத்வி பட தயாரிப்பிலும் ஈடுபட்டார். லுசிபெர் என்ற படத்தை இயக்கினார். மேலும், டிரைவிங் லைசென்ஸ் உள்பட 3 படங்களில் நடித்திருக்கிறார்.