ஆர்.மாதேஷ் இயக்கும் படம், சண்டக்காரி. இதில் சாஃப்ட்வேர் நிறுவன அதிகாரி வேடத்தில் ஸ்ரேயா, இன்ஜினீயர் கேரக்டரில் விமல் நடிக்கின்றனர். இப்படத்துக்காக லண்டன் ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல், ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை தாண்டி ஸ்ரேயா நடந்து சென்றார். உடனே அங்கு இருந்த துப்பாக்கி ஏந்திய லண்டன் போலீசார், அதிரடியாக ஸ்ரேயாவை சூழ்ந்துகொண்டனர்.