17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும் 12 முதல் 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. இதில் நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. 12ம் தேதி மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் விழா தொடங்குகிறது. அன்று கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற பாராஸைட் என்ற கொரிய மொழி படம் திரையிடப்படுகிறது. உலக சினிமா பிரிவில் ஜெர்மனி, ஹங்கேரி, அமெரிக்கா, பெல்ஜியம், பிரேசில், ஈரான், இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளியான 95 படங்கள் திரையிடப்படுகிறது.