‘மில்கி பியூட்டி’ மீண்டும் பாலிவுட் முயற்சி... கைகொடுக்குமா.. கைவிடுமா?

ஒரு சில ஹீரோயின்களுக்கு செல்லப்பெயர் உண்டு. அனுஷ்காவை ‘சுவீட்டி’ என்று அழைப்பதுண்டு அதுபோல் தமன்னாவை ‘மில்கி பியூட்டி’ என்பார்கள். தமன்னா உள்ளிட்ட பல ஹீரோயின்கள் வட இந்தியாவிலி ருந்து தென்னிந்திய படங்களில் நடித்து புகழ் பெற்று  முன்னணி இடத்தை யும் பிடிக்கின்றனர். இங்கு எவ்வளவு கோடி சம்பளம் வாங்கினாலும் பாலிவுட்டில் தங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதின் ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கிறது.

Advertising
Advertising

அதற்காக  இந்தி படங்களிலும் நடிக்கின்றனர். என்னதான் மும்பை சொந்த ஊராக இருந்தாலும் பாலிவுட் திரையுலகினர் தமன்னா, காஜல் அகர்வால் போன்றவர்களை தென்னிந்திய நடிகைகளாக வே பார்க்கிறார்கள். அவர்கள் நடிக்கும் இந்தி படங்களும் பெரிதாக வெற்றி பெறுவதில்லை. உள்ளதும் போய்விடுமோ என்ற பயத்தில் மீண்டும் கோலி வுட், டோலிவுட் படங்களில் கவனம் செலுத்துகின்றனர்.

இதற்கிடையில் புது ஹீரோயின்கள் அந்த இடங்களை பிடித்து விடுகிறார்கள்.தமன்னாவுக்கும் இந்த அனுபவம் உண்டு ஆனாலும் மும்பை பாசம்  சும்மாவிடுமா மீண்டும் இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அஜய்தேவ்கனுடன் ஹிம்மத்வாலா படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் தமன்னா.

அப்படம் தோல்வி அடைந்தது. அதன்பிறகு ஹம்ச கல்ஸ், என்டர்டெயின்மென்ட் படங்களில் நடித்தார். அவையும் தோல்வியாகவே அமைந்தது. பாகுபலி படம் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்றதில் அதில் நடித்திருந்த தமன்னாவுக்கு மறுபடியும் ஒரு மவுசு வந்ததால் அந்த நம்பிக்கையில் மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நவாசுதின் சித்திக் நடிக்கும், ‘போல் சூடியான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. நவாசுதின் ஏற்கனவே ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர். அவரது படங்களுக்கு பாலிவுட்டில் கொஞ்சம் வரவேற்பு இருப்பதால் அந்த நம்பிக்கையோடு மறுபடியும் பாலிவுட்டில் ரீஎன்ட்ரி தந்திருக்கிறார் தமன்னா. இந்தப் படமாவது தமன்னாவுக்கு பாலிவுட்டில் கைகொடுக்குமா.. கைவிடுமா? என்பது கூடிய சீக்கிரமே தெரிந்துவிடும்.

Related Stories: