தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் திரைக்கு வந்த அசுரன் படம் ரூ. 100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சுருளி படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் ஐஸ்வர்யா லட்சுமி, பிரிட்டிஷ் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வரும் தனுஷ் வரும் நவம்பர் 5ம் தேதியுடன் பணிகளை நிறைவு செய்கிறாராம்.