டீசல் டீசர் வெளியானது

சென்னை: சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படம், ‘டீசல்’. இதில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரிக்கிறது. இதுபற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறும்போது, ‘‘இது காதல் ஆக்‌ஷன் சேர்ந்த படம். சாமானியனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் கதை. இக்கதையை உருவாக்க 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். படங்களில் ஹரீஷ் கல்யாண் வழக்கமாக ரோஜாப்பூவுடன்தான் சுற்றுவார். இதில் அவரது கையில் அரிவாளை கொடுத்திருக்கிறோம். ஆக்‌ஷனிலும் சிறப்பாக நடித்துள்ளார்’’ என்றார். இதில் வழக்கறிஞராக அதுல்யா நடிக்கிறார். இந்நிலையில் பரபரப்பான டீசல் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி வைரலானது.

Related Stories: