மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த படம் துப்பறிவாளன். இதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளனர். சுந்தர்.சி இயக்கும் ஆக்ஷன் படத்தை முடித்துவிட்ட விஷால், துப்பறிவாளன் 2வில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தொடர்ச்சியாக 45 நாட்கள் லண்டனில் ஷூட்டிங் நடத்த உள்ளனர்.