லண்டனில் சுற்றும் லவ்பேர்ட்ஸ் பிரபாஸ்-அனுஷ்கா.. திருமண அறிவிப்பு வெளியாகுமா?

பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்கா பற்றி வருடக்கணக்கில் காதல் கிசுகிசு உலா வந்துகொண்டிருக்கிறது. முதலில் அதுபற்றி இருவரும் கண்டுகொள்ளாமலிருந்தனர். கிசுகிசு அதிகரிக்கத் தொடங்கியதும் வேறுவழியில்லாமல், ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்’ என்று பதில் அளித்தனர். குடும்பத்தின் எதிர்ப்பு காரணமாக இருவரும் காதலை வெளிப்படுத்த தயங்குகின்றனர் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் இருவரது வீட்டிலும் தனித்தனியாக வரன் பார்க்க தொடங்கினர்.

Advertising
Advertising

ஆனால் குடும்பத்தினர் பார்த்த வரன்களை இருவரும் ஏற்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். பிரபாஸ், அனுஷ்கா தங்கள் நட்பை இணைய தளத்தில் தொடர்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் இயக்குனர் ராஜமவுலியின் இல்லத் திருமணம் நடந்தபோது அதில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக கலந்துகொண்டனர். இதையடுத்து மீண்டும் அவர்களைப்பற்றிய காதல் கிசுகிசு சூடுபிடித்தது.

இந்நிலையில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் லண்டன் சென்றிருக்கின்றனர். அங்கு இருவரும் ஜோடிபோட்டு பிரபலமான இடங்களை சுற்றிப்பார்த்தனர். இவர்களுடன் ராஜமவுலி. நடிகர் ராணாவும் சென்றிருக்கிறார்கள். லண்டனில் ராயல் ஆல்பர் ஹாலில் பாகுபலி படம் திரையிடப்பட்டதால் அந்நிகழ்வில் பங்கேற்க படகுழுவினர் அங்கு சென்றிருக்கின்றனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னரும் வரும் 23ம் தேதி வரை அனைவரும் லண்டனிலேயே தங்கியிருக்க முடிவு செய்திருக்கின்றனர். அன்றைய தினம் பிரபாஸின் பிறந்த தினம். அங்கேயே பிறந்த தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளனர். பிறந்தநாளன்று பிரபாஸ் தனது திருமண அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அனுஷ்காவும் பிறந்த நாளில் உடன் இருப்பதால் ரசிகர்களிடையே திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Related Stories: