இளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்

சீனியர் ஹீரோக்கள் முன்னணி இடத்திலிருக்கும் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு தங்களது இமேஜை தக்கவைத்துக் கொள்வதுபோல் சீனியர் நடிகைகளும் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து இமேஜை தக்க வைக்கும் டெக்னிக்கை 80களின் இறுதி கால கட்டத்தில் ஸ்ரீதேவி கடைபிடித்தார். அந்த பார்முலாவை தற்போதுள்ள ஹீரோயின்களும் கையாள்கின்றனர்.

Advertising
Advertising

ஆனால் இது வெளியில் தெரியாமல் சைலன்ட்டாக நடத்திக்கொண்டிருந்தனர். அதை பகிரங்கமாக்கியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அர்ஜூன் ரெட்டி நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அடுத்து இவர் நடிக்கும் படத்தை புரி ஜெகநாத் இயக்க உள்ளார்.

இதில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்று பேச்சு எழுந்து வந்தநிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவருடன் நடிக்க இயக்குனரிடம் பகிரங்மாகவே வாய்ப்பு கேட்டிருக்கிறார். ‘நான் அதிதீவிரமாகவே புரி இயக்கும் படத்திலும் குறிப்பாக விஜய்தேவர கொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக இப்படத்தில் விஜய்தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசி வந்தனர். ஆனால் அவர் இந்தியில் பிஸியாக நடித்து வருவதால் தென்னிந்திய படங்களுக்கு தற்போதைக்கு கால்ஷீட் தர இய லாது என்று கூறிவிட்டாராம். ஜான்வி ஒதுங்கியிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் இயக்குனர் புரியின் அலுவலக கதவை தட்டினால் ரகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் பிரகாசமாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories: