இயக்குனர் வின்சென்ட் செல்வா திரைக்கதையில் மதர்

சென்னை: விஜய் நடித்த ‘ப்ரியமுடன்’ உள்பட சில படங்களை இயக்கியுள்ள வின்சென்ட் செல்வா திரைக்கதை எழுதி தயாரிப்பு மேற்பார்வை செய்ய, சரீஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மதர்’. ரெசார் எண்டர்பிரைசஸ் சார்பில் ரேஷ்மா.கே தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஹர்திகா, தம்பி ராமய்யா நடித்துள்ளனர். இன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி உறவு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. சந்தேகம் என்பது நல்ல உறவையும் கெடுத்துவிடுகிறது. இக்காலத்தை சேர்ந்த தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. எழுத்தாளர் ரூபன் கதை, வசனம் எழுதியுள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.தேவராஜன் இசை அமைத்துள்ளார். சாம் லோகேஷ் எடிட்டிங் செய்ய, கே.யு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளார். கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Related Stories: