ஆஸ்கருக்கு சென்றது கல்லி பாய்

இந்தியில் வெளியான படம் கல்லி பாய். ரன்வீர் சிங், அலியா பட் நடித்திருந்தனர். ஸோயா அக்தர் இந்த படத்தை இயக்கி இருந்தார். மும்பையில் குடிசை பகுதியை சேர்ந்த வாலிபர், ராப் பாடகராகி ஜெயிப்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் உள்பட 28 படங்கள் ஆஸ்கருக்கு செல்ல போட்டியில் இருந்தன.

அதில் சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு உள்ளிட்ட தமிழ் படங்களும் இருந்தன. இதில் கல்லி பாய் படத்தை தேர்வுக்குழு தேர்ந்தெடுத்தது. சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற பட்டியலில் போட்டியிட 2020ம் ஆண்டு ஆஸ்கருக்காக கல்லி பாய் படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: