ஐதராபாத்: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் ஜோடி சேர்ந்து நடிக்கும் பான் இந்தியா படம், ‘பெத்தி’. முக்கிய வேடங்களில் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், ராம் சரண் குறித்து அவரது மனைவி உபாசனா வெளியிட்டுள்ள சுவாரஸ்ய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, உபாசனா தனது கணவர் ராம் சரணின் செல்போன் நம்பரை, ‘ராம் சரண் 200’ என்று பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதுவரை ராம் சரண் தனது செல்போன் நம்பர்களை அத்தனை முறை மாற்றியுள்ளார். இப்போது அவர் மாற்றியிருப்பது 200வது நம்பர் என்பதால் அவ்வாறு பதிவு செய்துள்ளேன்’ என்றார். தமிழில் தனுஷ், ரவி மோகன் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றி வருகின்றனர்.
மனைவி சுவாரஸ்ய தகவல்: 200 வது போன் நம்பரை மாற்றிய ராம் சரண்
- ராம் சரண்
- ஹைதெராபாத்
- இந்தியா
- புச்சி பாபு சனா
- ஜான்வி கபூர்
- சிவராஜ்குமார்
- ஜெகபதி பாபு
- ஏ ஆர் ரஹ்மான்
- உபசாணம்
