தெலுங்கு ஓரளவு பரவாயில்லை. ஆனால் இந்தியைப் பொறுத்தவரை, எனக்கு எதுவும் புரியவில்லை. நான் ஸ்கிரிப்டைக் கொடுக்கிறேன், அது பின்னர் ஆங்கிலத்திலும் பின்னர் இந்தியிலும் மொழி பெயர்க்கப்படுகிறது. ஒரு காட்சியில் என்ன நடக்கிறது என்பது பற்றிய பொதுவான யோசனை எனக்கு உள்ளது. ஆனால் நுணுக்கங்களை நான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்தி படங்களில் பணிபுரியும் போது நான் ஊனமுற்றவனாக உணர்கிறேன். இவ்வாறு முருகதாஸ் கூறினார். இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் கஜினி, அக்ஷய் குமார் நடிப்பில் ஹாலிடே, சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படங்களை அவர் இயக்கியுள்ளார்.
