ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், ராதாரவி, ராகுல் தாத்தா நடித்துள்ள படம், கொரில்லா. டான் சாண்டி இயக்கியுள்ளார். படம் குறித்து ஜீவா கூறியதாவது: கொரில்லா படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த காரணம், இதில் நடித்த குரங்கு, இதற்கு முன் ஆங்கில படத்தில் நடித்திருந்தது. ஏற்கனவே அது படப்பிடிப்பில் பங்கேற்ற இடங்களில் ஷூட்டிங் நடத்தியதால், ரொம்ப பிரெண்ட்லியாக பழகியது.