‘ஆயிரத்தில் ஒருவன் 2’ ரெடி; ‘புதுப்பேட்டை 2’ டிராப்; செல்வராகவன் ஓபன்டாக்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க என்ஜிகே படம் திரைக்கு வந்திருக்கிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் எப்படி முதல்வராகிறான் என்பதை படம் கூறுகிறது. யாரை தாக்கி அரசியல் படம் எடுத்திருக்கிறீர்கள் என்றதற்கும் தனது அடுத்தடுத்த படங்கள் பற்றியும் கூறினார். ‘யாரையும் தாக்கி என்ஜிகே எடுக்கவில்லை.

இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியே இப்படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த கதைக்கு சூர்யாதான் பொருத்தமானவர். கார்த்தி, பார்த்திபன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2ம் பாகம் வருமா என்கிறார்கள். கண்டிப்பாக வரும். அதற்கான ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. சோழர்கள் வரலாற்றை கூறும் கதையான இதன் 2ம் பாகம் முதல்பாகத்தைவிட மிக அற்புதமாக அமைந்திருக்கிறது.

கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுக்க முடியாது. அதுபோல் தனுஷ் இல்லாமல் புதுப்பேட்டை 2ம் பாகம் எடுக்க முடியாது. இது பற்றி தனுஷிடம் பேசியபோது சொல்ல வேண்டியதையெல்லாம் முதல்பாகத்திலேயே சொல்லியாச்சி. 2ம் பாகத்தில் என்ன சொல்ல முடியும் என்று கூறினார். எனவே 2ம் பாகத்திற்கான வாய்ப்பு இல்லை’ என்றார் செல்வராகவன்.

Related Stories: