தர்பாரில் என்னென்ன மாதிரி பஞ்ச் டயலாக்; ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சூப்பர் ஸ்டார் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் போருக்கு தன் ரசிகர்களை தயாராக இருக்கச் சொல்லிவிட்டு ‘தர்பார்’ எடுக்கிறார். ஏற்கனவே விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘சர்கார்’ படத்தில் அதிரடி அரசியல் பஞ்ச் டயலாக்குகளை எழுதிய ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம் வேறு ‘தர்பார்’ படத்தை டபுள் கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வேறு ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘குசேலன்’ படங்களுக்குப் பிறகு சூப்பர்ஸ்டாரோடு இணைவதால் ட்ரிபிள் கொண்டாட்டம் என்றும்கூட கூறலாம். படத்தில் என்னென்ன மாதிரி வசனங்கள் இடம்பெறக்கூடும் என்று இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. நம் பங்குக்கு கொஞ்சம் வசன பெட்ரோல் ஊற்றுவோம்.

இது சூப்பர் தர்பார் இனிமே எதிரிகளோட போர்.. போர்!

நான் சீட்டுக்காக ஓட்டு கேட்டு

வர்றவன் இல்லே நாட்டுக்காக

வேட்டு போடறவன்

ஆரம்பிச்சிட்டேன் தர்பாரை

அது சொல்லும் என் பேரை

என்னோட தர்பாரிலே

அத்துமீறி நுழைஞ்சிட்டே

உனக்கு நீயே

சாவுமணி அடிச்சுக்கிட்டே

தொடங்கிடிச்சி என்னோட தர்பார்

முடிஞ்சவன் என்னை தொட்டுப்பார்

இங்கே எப்போ காலடி வெச்சேனோ

அப்பவே தொடங்கிடிச்சி என் தர்பார்

இனிமே நீ நிறைய எதிர்பார்

என் தர்பாருலே

பாட்டு சத்தமும் கேட்கும்

வேட்டு சத்தமும் கேட்கும்

கூட்டுங்கடா நம்ம தர்பாரை

காட்டுங்கடா நம்ம பவரை

என் தர்பாருலே

அத்துமீறி நுழையாதே

அடிபட்டு சாகாதே

நம்ம தர்பாருக்கு வாங்க

எப்பவும் சந்தோஷம்தாங்க

இமயத்துலே

சிவனோட தர்பாருன்னா

மக்களோட

இதயத்துலே என்னோட தர்பார்

என்னோட தர்பாருலே

எல்லாரும் ராஜா

அவங்க இதயத்துலே நான் ராஜா

எவனுக்கும் தூக்கமாட்டேன் கூஜா

நாற்காலிக்கு ஆசைப்பட்டு

உருவான தர்பார் இல்லே இது

நாட்டு மக்களை உட்காரவெச்சு

அழகுபார்க்க உருவான தர்பார்

மது மாதுன்னு கூத்தடிக்கிற

டாஸ்மாக் பாருன்னு நெனைச்சியா?

மக்களுக்காக மக்களுக்காக

உருவான தமிழ்நாட்டு தர்பாருடா...

தொடங்கிடிச்சி என் தர்பார்

தொடங்கிடிச்சி நம்ம வார்

சிம்மாசனத்துலே உட்கார்ந்துட்டு

ஆடல் பாடல் ஆரம்பமாகட்டும்னு

கூத்தடிக்கிற தர்பாருன்னு நெனைச்சியா?

என் மேலே கையை வெக்கிறவனெல்லாம்

இனிமேல் டார்.. டார்..

Related Stories: