யாருடன் காதல்? எனக்கும் சொன்னால் நல்லா இருக்கும்; ஐஸ்வர்யா ராஜேஷ்

தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவரை, ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் ரகசிய காதல் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து  அலறிய அவர் தனது டிவிட்டரில் விளக்கம் சொல்லி இருக்கிறார். ‘நான் யாரையோ காதலிப்பதாக வரும் வதந்திகள் குறித்து கேள்விப்பட்டேன். என் காதலன் யார் என்று எனக்கும் சொன்னால் நன்றாக இருக்கும். அவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புவதை  தயவுசெய்து நிறுத்துங்கள். கல்யாணம் போல் ஏதாவது மங்களகரமான நிகழ்ச்சி எனக்கு நடந்தால், அதை ரசிகர்களுக்கு வெளிப்படையாக சொல்லும் முதல் ஆள்  நானாகத்தான் இருப்பேன். எனவே, உண்மை இல்லாத தகவல்களை பரப்ப வேண்டாம். இப்போது நான் தனியாகவும், அதிக மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன்’ என்று  தெரிவித்துள்ளார்.

Related Stories: