மலையாள படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருக்கும் நடிகை சஜிதா மடதில், பெயருக்கு ஏற்றபடி ‘தில்’லாக காஸ்டிங் கவுச்சை தெறிக்க விட்ட சம்பவம் நடந்துள்ளது. உதவி இயக்குநர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கார்த்திக் என்பவர் சஜிதாவிடம் தொலைபேசியில் பேசினார். ‘தமிழ் படம் ஒன்றில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க முடியுமா? உங்களை பற்றிய விபரங்களை சொல்லுங்கள்’ என்று கேட்டார். ‘படம் தொடர்பான விவரத்தை இமெயில் அனுப்புமாறு கூறினார் சஜிதா. உடனே கார்த்திக், ‘நீங்கள் அட்ஜஸ்ட் பண்ண தயாரா?’ என்றார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சஜிதா அந்த நபரை போனிலேயே காய்ச்சி எடுத்தார்.