ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு தர்பார் என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தர்பார் படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது படத்தில் ரஜினி போலீசாக நடித்திருந்தார்.