ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நிவேதா பெத்துராஜ், பொதுவாக எம்மனசு தங்கம், டிக்.டிக்.டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல், விஷ்ணு விஷால் ஜோடியாக ஜகஜால கில்லாடி, வெங்கட் பிரபுவின் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.