விஜய் ஜோடியாக புதிய கீதை படத்தில் நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தேசி மேஜிக் என்ற படத்தை சொந்த மாக தயாரித்து நடித்தார். இதற்காக பாலிவுட் தயாரிப்பாளர் அஜய் சிங்கிடம் இரண்டரை கோடி கடன் வாங்கியதாக தெரிகிறது. தேசி மேஜிக் படம் வெளியானவுடன் தருவதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் அமீஷா பட்டேலிடம் கடன் தொகையை திருப்பி தரும்படி தயாரிப்பாளர் கேட்டார். அவரை சமாதானம் செய்த அமீஷா சில மாதங்களில் வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக கூறியதுடன் காசோலையும் கொடுத்தார்.