எல்லா கேரக்டரிலும் நடிப்பேன்; சொல்கிறார் அக்‌ஷய் குமார்

பேட்மேன், கோல்ட், 2.0, கேஸரி என படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அக்‌ஷய்குமார். நடிக்கும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதும் இவர் இமேஜ் பார்க்காமல் பலவிதமான கேரக்டர்களில் நடிப்பதும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. இந்நிலையில் இவர் நடித்துள்ள கேஸரி படம் ரிலீசானது. இது 1897ல் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்ட படம். இதில் சீக்கியராக அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

அடுத்து மங்கள்யான் படத்தில் விண்வெளி வீரராக நடிக்கிறார். ஹவுஸ்ஃபுல் 4 காமெடி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் முழுநீள ஹாரர் காமெடி படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதன் கதை கேட்டேன். மிகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இது இருக்கும் என்றார் அக்‌ஷய்குமார்.

Related Stories: