நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் வைபவ். இதில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் அறிமுகம் ஆகிறார். இது குறித்து நிதின் சத்யா கூறியது: இது கிரைம் திரில்லர் கதை கொண்ட படம். ஜெயம் ராஜாவிடம் உதவியாளராக இருந்த சால்ஸ் இயக்குகிறார். படத்தின் 50 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஒரு போலீஸ் ஸ்டேஷனை சுற்றி நடக்கும் மல்டி டைமன்ஷன் பாணியிலான படமிது. இதில் வைபவ் போலீஸாக நடிக்கிறார்.