கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ராஷ்மி கவுதம். சில தினங்களுக்கு முன் இவர் விசாகப்பட்டினத்தில் வேகமாக கார் ஓட்டிச் சென்றார். கஜுவாக பகுதியில் அவர் சென்றபோது சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது காரை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் அந்த நபர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.