சமந்தா கேரக்டரால் கணவர் அதிர்ச்சி

விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடித்ததுபற்றி சமந்தா கூறியதாவது: சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே இந்த கேரக்டரில் நடிக்க கேட்டு முன்னணி நடிகைகள் சிலரிடம் இயக்குனர் அணுகியிருக்கிறார். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. என்னிடம் இயக்குனர் கேட்ட போது நடிக்க ஒப்புக்கொண்டேன்.

எனது கதாபாத்திரம்பற்றி என் கணவர் நாக சைதன்யாவிடம் சொன்னபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் அந்த வேடத்தில் நான் நடிக்க உள்ளதை அவரிடம் தெரிவித்துவிட்டேன். பட ரிலீஸுக்கு பிறகு என்னென்ன கமென்ட் வருமோ என்று எனக்கு தெரியவில்லை. விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்தின் மீது அவர் காட்டிய ஈடுபாடு மிகவும் அதிகம்.

ரம்யாகிருஷ்ணன் மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதை என்ன என்பதை டிரெய்லரை பார்த்து யாரும் யூகிக்க முடியாது. அரசியலில் ஈடுபடுவீர்களா என்கிறார்கள். அந்த எண்ணம் எனக்கு இல்லை. நடிப்பில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அது விளையாட்டு துறையை சேர்ந்தவரின் குறிப்பாக ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்க ஆசை. ஹாலிவுட் படங்களில் வருவதுபோல் சூப்பர் உமன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் விருப்பம் உள்ளது.

Related Stories: