அறுகம்புல்லின் மகிமை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முன்காலத்தில் தாபரம் என்ற நகரில் தென் திசையில் ஒரு முனிவர் இருந்தார். அவர் பெயர் கவுண்டினியர். அவர் மனைவி பெயர் ஆச்ரியை. அவள் தன் கணவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். ‘‘ஏன் விநாயகருக்கு அறுகம் புல்லை வைக்கிறீர்கள்?’’ எனக் கேட்டாள். அதற்கு அவள் கணவன், பூர்வீகக்கதை ஒன்றைச் சொல்ல வந்தான் மனைவியிடம். ‘‘பூர்வீக காலத்தில், எமன் சபையில் யாவரும் இசை இசைத்துக் கொண்டிருந்தனர். பாடல்கள் பாடி நடனமாடிக் கொண்டிருந்தனர்.

இன்னும் சிலர் நடனமாடுவதையே மிகவும் ரசித்துக்கொண்டிருந்தனர். ரம்பை, திலோத்தமை, ஊர்வசி இவர்கள் மேல் வைத்தகண் மாறாது பார்த்துக் கொண்டிருந்தனர் தேவர்கள். எமன், அம்மூவரின் நடனத்தை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் திலோத்தமையின் நடனத்தால் கவரப் பெற்று ஓடிச் சென்று அவளைப் பிடித்தான் எமன். பார்த்திட்ட தேவராதி தேவர்கள் ஓடிப் போயினர். ஊர்வசியும், ரம்பையும் தத்தம் அறைகளுக்கு சென்றுதாழிட்டுக் கொண்டனர்.

எமன் திலோத்தமையின் மேல்கொண்ட காதல், காமமாக மாறி கைகளைப் பிடித்து இழுத்தான். அதற்குள் எமனின் திரண்ட காமம் சுக்கிலமாக நழுவியது. அது அப்படியே ஒரு அசுரனாக மாறியது. அசுரனின் பெயர் ‘அனலாசூரன்’ எனப் பெயரிட்டான். தேவலோக மக்களையெல்லாம் கொன்றுவிட்டான். பூமி மக்களையும் கொன்றுவிட்டான். ஆ, ஊ எனக் கத்தினான். எமன், ‘‘டேய், நீ எதைத் தொட்டாலும் தீயாகத் தான் மாறும் எமன் வன்மமாகப்  பேசினான்’’.

உடனே திருமாலிடம் சென்று நிலவரத்தைக் கூறினர் சிலர். திருமால், தன் படையாட்களுடன் மோதிட அனலாசூரன் விழுந்துவிட்டான். வருணன் அந்த அனலாசுரனிடம் சென்று, கடும் மழை பொழிவித்தார். குளிர் சந்திரன் தன் குளிர் கதிர்களால் அசுரனின் மேல் தாக்கீது செய்தார். விநாயகர் பெரும் உருவத்தோடு அனலாசுரனின் அருகில் சென்றார். அசுரனது உருவம் சிறிதானது. விநாயகர் மேலும் அவனைச் சிறிதாகச் செய்து அப்படியே விழுங்கி விட்டார். விநாயகர் வயிற்றில் சூடாகக் கிளறல்ஏற்பட்டது.

சிவனும் தனது குளிர் பானங்களை வயிற்றின் மேல் போட்டார். கங்கா தேவியை வரச் சொல்லி, குளிர் நீரால் மேலே ஊற்றிக் கொண்டிருந்தாள். எல்லா தெய்வங்களும் அசுரனின் மேலேயும் குளிர் பானங்களை பொழிந்தனர். அசுரன் உருண்டு புரண்டான் விநாயகர் வயிற்றில். சிவன், மந்திரம் ஜபித்து நின்றார். விநாயகர் அங்கும் இங்குமாக ஓடினார். திடீரென அசுரனின் சிறிய உருவம் வௌியேறியது. அது எங்கு சென்றது என புரியாமல் அனைவரும் திகைத்தார்கள். ஆனால், கங்காதேவி சிவனின் தலை முடிமேல் இருந்து குளிர் நீரால், விநாயகரின் வயிற்றில் சூடு இல்லாமல் குளிர் நிலை ஆனது. சந்திரன், வருணன் மற்ற தெய்வங்களும் விநாயகர் மேல் குளிர் நீரால் குளிர்வித்தனர்.

விநாயகர் உருவம் பழைய நிலைக்கு வந்தது. யாவரும், அறுகம்புல்களை விநாயகர் வயிற்றின் மேல் ஒட்டவைத்தனர். தேவர்களும், அருகம்புற்களை வயிற்றின் மேல் பரப்பி வைத்தனர். விநாயகக் கடவுளுக்கு வயிற்றில் பழையபடி அமைத்து அவரின் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டார். ஒரு பாறாங்கல் மீது அமர்ந்தார். ‘‘அவன் அசுர வேகத்தில் வந்தான். விநாயகக் கடவுள் அவனை இல்லாமல் செய்துவிட்டார். இனி தேவர்களும், பூமி மக்களும் இன்புற்று மகிழ்வர்’’ எனச் சொன்னார் விநாயகர். அருகம்புற்களின்மகிமையைப் பார்த்தீர்களா!

அந்தப்புற்களை இறைவன் விநாயகர் வயிற்றின் மேல் வைத்ததுபோல், அறுகம்புல்லையும் வைத்து வணங்குங்கள் என்றும். சிவன் ஐய்யா எல்லோரையும் காப்பாற்றிவிட்டார். உடனிருந்த தெய்வங்களுக்கு பிரார்த்தனைகள் என்றும் என்றார். ஆச்ரியை, அறுகம்புல்லின் மகிமையைப் பற்றி தெரிந்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

தொகுப்பு: கவிஞர் பொள்ளாச்சி சிவமணியன்

Related Stories: