காமெடி இமேஜில் சிக்க மாட்டேன்: கிரேஸ் ஆண்டனி

சென்னை: ராம் இயக்கத்தில் சிவாவுடன் இணைந்து ‘பறந்து போ’ படத்தில் நடித்திருக்கிறார் கிரேஸ் ஆண்டனி. அவர் கூறியது:‘பறந்து போ’ படம் நாளை திரைக்கு வருகிறது. இதனால் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். தமிழில் முதல் படம் என்பதால் இப்படியொரு உணர்வு. மலையாளத்தில் நான் நடித்த ‘நுன்னக்குழி’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் தமிழ் ரசிகர்களும் எனக்கு தங்களது அன்பை கொடுத்திருக்கிறார்கள். மலையாளத்தில் காமெடி வேடங்களில் அதிகம் நடித்திருந்தாலும் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை.

அதனால் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க விரும்புகிறேன். பறந்து போ படத்திலும் அதுபோல், எல்லா அம்சங்களும் கலந்த கேரக்டர்தான். இதில் காமெடியும் செய்திருக்கிறேன். எமோஷனலான நடிப்பும் தந்திருக்கிறேன். அதற்கு காரணம், ராம் சார்தான். அவர் எனக்காக காத்திருந்து இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். நமது வீட்டுக்கு பக்கத்திலுள்ளவர்கள் எப்படி யதார்த்தமாக இருப்பார்களோ அதுபோன்ற ஒரு குடும்பத்தின் கதை இது.

Related Stories: