வாடிவாசல் படம் டிராப் ஆனதற்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது. சூர்யா – வெற்றிமாறன் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசும்போதே படத்தின் முழுமையான கதையை கொடுத்துவிட சூர்யா தரப்பில் கேட்கப்பட்டதாகவும் அதற்கு வெற்றிமாறனோ படப்பிடிப்பில் தான் இனிமேல் இந்தக் கதை எப்படி சென்றால் நன்றாக இருக்கும் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்வேன் எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு ஒப்புக்கொள்ளாத சூர்யா தரப்பு, படப்பிடிப்பு நாட்கள், முழுமையான கதை இரண்டையும் கொடுத்தால் மட்டுமே படம் பண்ண முடியும் என்பதை திட்டவட்டமாக கூறியதாகவும் இதனால் கதையை முழுமையாக முடித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வெற்றிமாறன் சென்றுவிட்டதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதேபோல், வாடிவாசல் படத்தை ஒரே பார்ட்டில் மொத்த கதையையும் சொல்லிவிட வேண்டும் என்றும் சூர்யா தரப்பு வெற்றிமாறனிடம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், ‘வாடிவாசல்’ கதையை வெற்றிமாறன் முழுமையாக எழுதிக் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே, அதன் படப்பிடிப்பு அடுத்த கட்டத்துக்கு நகரும் என்றும், அதுவரை தொடங்க வாய்ப்பில்லை என்றே தமிழ் சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
