நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உலகளவில் கவனம்பெற்றதுடன் ஆஸ்கர் விருதுபெற்ற திரைக்கதையாளர் அலெக்ஸாண்டர் டெனலாரிஸ், நித்திலனை நேரில் அழைத்துப் பாராட்டினார். அடுத்தாக, நித்திலன் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது.
ஆனால், இப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நித்திலன் மீண்டும் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
