அவரைத் தொடர்ந்து பேசிய சுரேஷ் கோபி, ‘‘அனுபமா தனது மனதிலிருந்து பேசுகிறார். இது முதல் முறையல்ல. இதிலிருக்கும் உண்மை எனக்குத் தெரியும். சிம்ரன் நடிக்க வந்த புதிதில், மலையாளத் திரையுலகில் புறக்கணிக்கப்பட்டு விடப்பட்டவர். ஆனால், பின்னர் மலையாளப் படங்களில் முன்னணி கதாநாயகியாக அவரை நடிக்க வைக்க விரும்பி, முன்னணி இயக்குனர்கள் அவரைத் தேடிச் சென்றதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அசின் மற்றும் நயன்தாரா கேரளத்தைச் சேர்ந்தவர்கள். மலையாளத்தில் தங்கள் கரியரைத் தொடங்கினர். அவர்களைப் போன்ற நடிகைகள் மற்ற மொழிகளில்தான் முன்னணி கதாநாயகிகளாகப் புகழ்பெற்று மலர்ந்தனர். அனுபமாவின் வாழ்க்கையிலும் அதே நடக்கும். இதுதான் கர்மா. இது நிச்சயம் நடக்கும். அனுபமாவுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறினார்.
