கோதையின் திருப்பார்வை கண்ணனின் அருட்பார்வை!

அருள்மிகு இராமபிரான் சீதா தேவி, இலக்குமணருடனும், அருள்தரும் ருக்மணி சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணருடன் குடி கொண்டுள்ள திருத்தலங்கள் தொண்டை நாட்டில் பல இருந்தாலும் அவற்றில்  மிகவும் சிறப்பு வாய்ந்த சென்னை, நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வரூப தரிசனமாக பக்தர்களுக்கு காட்சி தருவது இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும் .

இவ் ஆலயத்தில் தென்மேற்கில், ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் கிருஷ்ணருக்கு ஒரு சந்நதி கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. பொதுவாக  எல்லா ஆஞ்சநேயர் கோயில்களில் ராமர் சந்நதி கட்டப்பட்டாலும், கிருஷ்ணருக்கு சந்நதி கட்டப்படுவது அரிதாகும். இந்திய இதிகாசங்களில் ராமாயணத்தில் ராமரின் நேரடி சீடராகவும், மகாபாரதத்தில் அர்ஜுனனின் தேர் கொடியிலும் கடவுள்களில் ஆஞ்சநேயர் மட்டுமே இருந்தார் என்பதை பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்தக் ஆலயத்தில் கிருஷ்ணர் சந்நதி கட்டப்பட்டுள்ளது.

எதிரிகளால் அழிவிலிருந்து காப்பாற்ற கிருஷ்ணர். கோயிலின் வடகிழக்கு பகுதியில், ஒரு சிறிய மேடையில், “விநாயகர்” கிழக்கு நோக்கி வீற்றுள்ளார் மற்றும் அவருக்கு இடதுபுறம் மற்றொரு மேடையில் ‘நாக’ நிறுவப்பட்டுள்ளது. துறவி ராகவேந்திரர் கிருஷ்ணரை நோக்கி தனது இருப்பிடத்தை எடுத்துள்ளார்.

இவ் ஆலயத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமியின் கிருஷ்ணஜெயந்தி உற்சவமானது பசலி 1432 ஸ்ரீ சுபகிருது வருடம் ஆடி மாதம் 27ம் நாள்(12.8.2022 வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பித்து (20.8.2022) சனிக் கிழமை வரையில் நடைபெற்று வருகிறது.

(17.8.2022) புதன்கிழமை மாலை 6.00 மணி முதல் யாகசாலா பூர்வாங்க பூஜை ஆரம்பமாகி தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி உற்சவம் ஆவணி 3ம் தேதி (19.8.2022) வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.00 மணிக்கு ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபால சுவாமிக்கு சிறப்பு நவகலச திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் பிறகு அன்று ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிக்கு இலட்சார்ச்சனையும். தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெறும்.

(20.8.2022) சனிக்கிழமை மாலை 7 மணியளவில் ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபால சுவாமியின் சிறப்பு அலங்காரமும் மற்றும் திருவீதியுலா உற்சவமும் நடைபெறும். ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி இலட்சார்ச்சனை உற்சவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபால சுவாமியின் அருள் பெறுவோம்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

Related Stories: