பூரண பலன் கிடைக்க வேண்டுமா?: திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் போதும்..!!

காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் “கலியுக வைகுண்டம்” ஆக கன்னியாகுமரியில் ஏழுமலையான் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும் என எண்ணுவோர் நேராக திருமலை மீது உள்ள திருப்பதி சென்று திருவேங்கடனை வணங்குவது வழக்கம். ஆனால் எம்பெருமானை வணங்கும் முன் தரிசிக்க வேண்டிய கடவுள்களை வணங்கிய பின்னர் திருமாலை வணங்கும் முறையை ராமானுஜர் வகுத்துள்ளார்.

எப்படி வணங்குவது:

1. முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமானை வணங்க வேண்டும்.

2. பின்னர் அலர்மேல் மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து அருள் பெற வேண்டும்.

3. பின்னர் திருமலையின் மீது ‘வராக தீர்த்தக் கரையில்’ வீற்றிருக்கும் ‘வராக மூர்த்தியை’ மனமுறுகி தரிசிக்க வேண்டும்.

4. அதன் பின்னர் தான் மலையப்ப சாமியான திருப்பதி வெங்கடாசலபதியை சேவிக்க செய்ய வேண்டும்.

இந்த வழி முறையை ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இருப்பினும் நம்மில் பலரும் இந்த வழிமுறையை பின்பற்றாமல் முழு பலனையும் அடைவதில்லை.

Related Stories: