சென்னை: மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சானியா ஐயப்பன், ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியான ‘குயின்’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘லூசிபர்’ மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘தி பிரீஸ்ட்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, சானியா ஐயப்பன், ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்.ஜே. பாலாஜி நடித்த ‘சொர்க்க வாசல்’ படத்திலும் நடித்தார்.
சமீபத்தில் 23 வயதை எட்டியுள்ள சானியா, நண்பர்களுக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்துள்ளார். பார்ட்டியில் அவரது தோழியும் பிரபலமுமான அபர்னா தாமஸுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் லெஸ்பியனா என சரமாரி கேள்விகள் எழுப்பியுள்ளனர். ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.