இத்தாலி கார் ரேஸில் அஜித் 3வது இடம்

சென்னை: இத்தாலியில் நடந்த மொகெல்லோ 12H கார் ரேஸில், அஜித் குமாரின் அணி 3வது இடம் பிடித்துள்ளது. முன்னதாக அஜித் குமார் அணி துபாய், போர்ச்சு கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டது. துபாயில் 3வது இடம் பிடித்தது. தற்போது இத்தாலியில் நடந்த மொகெல்லோ கார் ரேஸில் 3வது இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று பரிசு வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அஜித் குமார் படைத்துள்ளார். இதை அவரது அணியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். இது வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். நடிப்பை தவிர்த்து அஜித் குமார் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதற்காக ஒரு அணியை உருவாக்கி, உலகம் முழுவதும் நடக்கும் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் தற்போது இத்தாலியில் 3வது இடத்தை பிடித்திருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories: