15 நிமிட சிங்கிள் ஷாட் 10 நாட்கள் ரிகர்சல்: எஸ்.ஜே.சூர்யா தகவல்

ஐதராபாத்: ரியா ஷிபு தயாரிக்க, எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் நடித்துள்ள ‘வீர தீர சூரன்: பார்ட் 2’ என்ற படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ‘இது மார்ட்டின் ஸ்கோர்செஸி ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள படம். கிராமத்து பின்னணியில் சொல்லப்பட்டுள்ளது. மார்ட்டின் ஸ்கோர்செஸி ராஜமுந்திரி பகுதியை களமாக கொண்டு படம் உருவாக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். 15 நிமிட நீளம் கொண்ட சிங்கிள் ஷாட் ஒன்றில் நடிக்க, 10 நாட்கள் ரிகர்சல் செய்தோம். தென்னிந்திய படவுலகம் பெருமைப்பட வேண்டிய திறமையான ஒரு நடிகர் விக்ரம்’ என்றார்.

பிறகு விக்ரம் பேசும்போது, ‘நான் ‘தூள்’, ‘சாமி’ போன்ற படங்களில், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி மாஸாக நடித்தேன். இப்படத்தில் ரஸ்டிக்காக நடிக்க விரும்பினேன். ரசிகர்களுக்கான படத்தை கொடுப்பதற்காக நானும், அருண் குமாரும் சேர்ந்து பணியாற்றி னோம். நானும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவர் இயக்கிய ‘வாலி’, நான் நடித்த ‘சேது’ சமகாலத்தில் வெளியானது.

‘மாநாடு’, ‘டான்’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் அவர் வித்தியாசமாக நடித்துள்ளார். அதை பார்க்கும்போது, ஹாலிவுட் நடிகர்கள் ராபர்ட் டி நிரோ, அல்பசினோ போன்ற நடிகர்கள் நினைவுக்கு வருகின்றனர். தெலுங்கில் அருண் குமார் இயக்கிய ‘சேதுபதி’, ‘சித்தா’ ஆகிய படங்கள் ரிலீசாகியுள்ளன. இவ்விரு படங்களின் கலவையாக ‘வீர தீர சூரன்’ இருக்கும்’ என்றார். இப்படம் வரும் 27ம் தேதி 2 மொழிகளில் திரைக்கு வருகிறது.

 

Related Stories: