ஒரே ஆண்டில் 149 சாட்சிகளிடம் விசாரித்தோம்: நீதிபதி ஆறுமுகசாமி பேட்டி

சென்னை: ஒரே ஆண்டில் 149 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி கூறினார். இதுதொடர்பாக, ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த பின் நீதிபதி ஆறுமுகசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா உடல் நிலை எப்படி இருந்தது என்பதில் தொடங்கி விசாரணை நடத்தப்பட்டது. 154 சாட்சிகள் உள்ளது. இதில் நான் காலதாமதம் செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் முதல் ஒரு மாதத்தில் சட்டப்படி நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அது இந்த ஆணையத்தால் விடப்பட்டது. அதற்கு பிறகு தான் விசாரணை தொடங்கப்பட்டது. அதிலிருந்து 12 மாதத்தில் 149 சாட்சிகளை விசாரணை செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட 150 நாள் விசாரணைக்கு செலவிடப்பட்டுள்ளது. சாட்சிகளின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரின் சாட்சியும் அதிக பக்கங்களை கொண்டது. அதனால் இந்த ஆணையம் நீதிமன்றம் போல் செயல்பட்டது என உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. மரணம் குறித்து ஆங்கிலத்தில் 500 பக்கத்திலும், தமிழில் 608 பக்கமும் எழுதி இருக்கிறோம். 3 தொகுதியாக சாட்சியத்தின் சுருக்கத்தை கொடுத்து இருக்கிறேன். அதை வெளியிடலாமா, வேண்டாமா என அரசுதான் முடிவு செய்யும். சசிகலா நேரில் வர தயாரில்லை என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் அவரை அழைக்கவில்லை. மருத்துவரை அனுப்பி, விசாரணை செய்ததற்கு பழைய உத்தரவிலே நன்றி தெரிவித்திருக்கிறேன். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்….

The post ஒரே ஆண்டில் 149 சாட்சிகளிடம் விசாரித்தோம்: நீதிபதி ஆறுமுகசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: