அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக் சீரியோடாட்டிக் கதிரியக்க அறுவை சிகிச்சை திட்டம்

சென்னை: அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக் சீரியோடாட்டிக் கதிரியக்க அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து, புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் சங்கர் வங்கிபுரம் கூறியதாவது: அப்போலோ கேன்சர் சென்டரின் சைபர்நைப் அகாடமியா தொடங்கப்பட்டிருப்பது, ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் கதிரியக்க அறுவை சிகிச்சையில் மருத்துவப் பணியாளர்களின் திறன்களையும், அறிவையும் மேம்படுத்துவதற்கு ஒரு மிகச்சிறப்பான வாய்ப்பாகும்.

இந்தியாவில் சைபர்நைப் ரோபோட்டிக் அறுவை சிகிசிச்சை அமைப்பை முன்னோடித்துவமாக அறிமுகம் செய்து செயல்படுத்தி வருவதன் மூலம் நமது நாட்டில் புற்றுநோய் சிகிச்சை என்பது, மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது. எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த பயிற்சி செயல்திட்டத்தின் போது மதிப்புமிக்க நிபுணத்துவ திறனையும், உள்நோக்குகளையும் பங்கேற்பாளர்களோடு பகிர்ந்து கொள்ளும் நிகழ்வை எதிர்நோக்குகிறோம். நோயாளிகளுக்கு இன்னும் சிறப்பாக சேவையாற்றவும் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் புதிய உலகளாவிய தரநிலைகளை நிறுவவும் இது ஏதுவாக்கும்.

புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் மகாதேவ் போத்தராஜு பேசியதாவது: மிக நவீன கல்வி மையத்தை நிறுவி தொடங்குவது, உலகத்தரத்தில் மிக உயர்ந்த புற்றுநோய் சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்கான குறிக்கோளோடும், செயல்திட்டத்தோடும் மிக நேர்த்தியாகப் பொருந்துகிறது. புற்றுநோயியல் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களின் நிபுணத்துவத்தையும் மற்றும் செயல்திறன்களையும் சைபர்நைப் பயிற்சி இன்னும் சிறப்பாக மேம்படுத்தும். இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகுமுறையிலேயே விரிவான மாற்றத்தை கொண்டு வரும்.

அப்போலோ ஆஸ்பிட்டல் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் குழும புற்றுநோயியல் இன்டர்நேஷனல் துறையின் பிரசிடென்ட் தினேஷ் மாதவன் பேசியதாவது: புற்றுநோய் சிகிச்சை காலத்தில் புதிதாக வந்திருக்கும் புரட்சிகர தொழில்நுட்பங்கள் மிகவும் தனிபயனாக்கப்பட்ட, பிரத்யேகமான மற்றும் பயனளிக்கும் சிகிச்சைக்கு வழிவகுத்திருக்கிறது. அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அக்யூரே ஆகியவை இணைந்து தொடங்கியிருக்கும் ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் கதிரியக்க சிகிச்சை செயல்திட்டம், ஏசியன் பிராந்தியத்தில் இதுதொடர்பான பயிற்சி வசதிகளை பெரிய அளவில் முன்னேற்றும். சைபர்நைப் தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்து பயன்படுத்துவதற்கு தேவைப்படும். இன்றியமையாத அறிவு மற்றும் திறன்களை புற்றுநோயியல் மருத்துவர்களும், இயற்பியலாளர்களும் மற்றும் சிகிச்சை வழங்கும் தொழில்நுட்ப பணியாளர்களும் பெற்று பயனடைவதற்கு இது உதவும். இவ்வாறு கூறினர்.

The post அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக் சீரியோடாட்டிக் கதிரியக்க அறுவை சிகிச்சை திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: