நாளை திரைக்கு வரும் பிறந்தநாள் வாழ்த்துகள்

சென்னை: அப்புக்குட்டி, கதையின் நாயகனாக நடித்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்த அப்புக்குட்டிக்கு, அந்த படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. ப்ளான் திரி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள பிறந்தநாள் வாழ்த்துகள் படத்தில் ஹீரோயினாக மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில் நடிக்கிறார். ஒரு மனிதனின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பே இப்படம். சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசும்படியாக இப்படம் அமைந்துள்ளது. குடும்பத் தலைவன் சரியாக இல்லை என்றால் குடும்பம் என்னவாகும் என்பதை இப்படம் விளக்குகிறது. இப்படத்தை தொடர்ந்து அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ஜீவகாருண்யம், வாழ்க விவசாயி ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வருகிறது.

Related Stories: