அந்த பதிவில் அபிநயா கூறும்போது, ‘‘அவர் எனது சிறு வயது நண்பர். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் இருவரும் உறவிற்குள் வந்து விட்டோம். இனிமேல் என்னை எந்த ஒரு நடிகருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம்’’ என கூறியுள்ளார். கூடிய விரைவில் அபிநயாவின் திருமண செய்தி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் விஷாலுடன் இணைத்து இவர் பேசப்பட்டார். அதனாலேயே மற்ற நடிகர்களுடன் சேர்த்து பேச வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் பணி என்ற படத்தில் அபிநயா நடித்தார். இதில் இவரது நடிப்பு பேசப்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாகி படமும் வெற்றி பெற்றுள்ளது.
