பெருமாள் போற்றி

இறைவழிபாடு எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் மனோவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நன்மைகளை தரும் ஒரு செயலாகும். நமக்கு மிகவும் விருப்பமான இறைவனின் உருவத்தை கண்களை மூடி மனதில் நினைத்து உண்மையான பக்தியுடன் வணங்க நன்மைகள் ஏற்படும். காக்கும் கடவுளானவர் திருமால் மக்கள் வசீகரம் கொண்டவர். எந்நிலையிலும் மன சமநிலை இழக்காதவர். அவரை வழிபடும் பக்தர்களின் எத்தகைய துன்பங்களையும் போக்க கூடியவர் அவரின் அருமைகளை போற்றி இயற்றப்பட்ட போற்றி பாடல் இது.

பெருமாள் போற்றி

வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி !!!

தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி

குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி

உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி

சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி

மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி

பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி

தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி

நலன்கள் அனைத்தையும் அருள்பவர் பெருமாள். பெருமாளுக்குரிய இந்த போற்றி துதிகளை தினமும் காலையில் 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக படிக்க வேண்டும். சனிக்கிழமைகளில் படிப்பது மிகவும் விசேஷமானதாகும். வளர்பிறை ஏகாதசி தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று இதை கூறிவணங்குவது சிறப்பு. இதனால் உங்களுக்கு மக்கள் வசீகரம் உண்டாகும். நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனத்துயரங்கள் மற்றும் மனக்கவலைகள் நீங்கும்.

மனிதர்களாக பிறந்து விட்டாலே நாம் எந்த அளவிற்கு இன்பங்கள் அனுபவிக்கிறோமோ அதே அளவு துன்பங்களையும் அனுபவிக்கிறோம். மும்மூர்த்திகளில் பக்தர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டு அவர்களை எப்போதும் காப்பவராக இருப்பது மகாவிஷ்ணுவாகிய திருமால் தான். செல்வத்தின் முழு உருவான கருணை குணம் அதிகம் கொண்ட லட்சுமி தேவியை தனது துணையாக கொண்டவர். அப்படியான பெருமாளின் மீது இயற்றப்பட்ட இந்த போற்றி துதியை தினமும் பாடிவருவதால் நலங்கள் பல ஏற்படும்.

Related Stories:

>