சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், அருண் பாலாஜியின் பலூன் பிக்சர்ஸ் சேர்ந்து தயாரிக்க, தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கிய ‘பாட்டல் ராதா’ படம் வரும் 24ம் தேதி ரிலீசாகிறது. ஷான் ரோல்டன் இசை அமைக்கும்இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் நடிக்கின் றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் அமீர், என்.லிங்குசாமி பங்கேற்றனர். அப்போது இயக்குனர் வெற்றி
மாறன் பேசுகையில், ‘இது மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட படம். முற்பகுதி சிரிக்கவும், பிற்பகுதி சிந்திக்கவும் வைக்கும். குடிக்கு அடிமையானஅனைவருக்கும் மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கியமான படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. நான் புகைப்பழக்கத்தில் இருந்து எப்போதோ மீண்டு வந்துவிட்டேன்’ என்றார். பிறகு மிஷ்கின் பேசுகையில், ‘சினிமாவில் அதிகமாக குடித்தவனும் நான்தான், குடித்துக் கொண்டிருப்பவனும் நான்தான், அதிகமாக குடிக்க இருப்பவனும் நான்தான்.
மன வருத்தம் அடைந்தவர்கள் மது அருந்துகின்றனர். பிறகு அதற்கு அடிமையாகின்றனர். அவர்களை அவமரியாதை செய்வது தவறு. அவர்கள் ஏன் இப்படி மாறினார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். நான் குடிகாரன் என்றாலும், எப்போதும் குடி என்னை அடிமையாக்கியது இல்லை. எனக்கு வாழ்க்கைமீது அதிக நம்பிக்கை இருக் கிறது. குடிபோதையைவிட மிகப்பெரிய போதை, சினிமா. அதைவிட இளையராஜாதான் எனக்கு மிகப்பெரிய போதை.
நான் குடிக்கும்போது சைட்டிஷ்ஷாக அவருடைய பாடல்களைத்தான் கேட்பேன். பலபேரை குடிகாரனாக மாற்றியது அவர்தான். குடி இல்லாத நாடே கிடையாது. சாராயம் காய்ச்சும் அளவுக்கு குடியில் எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ‘பாட்டல் ராதா’ என்ற படத்தை பார்ப்பவர்கள் குடிப்பதை நிறுத்திவிடுவார்கள்’ என்றார். அவரது பேச்சு ஜாலியாக இருந்தாலும், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆங்காங்கே கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி, மேடை நாகரீகம் இல்லாமல் அவர் பேசியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர் களும், நெட்டிசன்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
