வீட்டில் துஷ்ட சக்திகளின் தொந்தரவு நீங்க வனதுர்க்கை ஹோமம் பூஜை செய்யுங்கள்

நமது முன்னோர்கள் நமக்கு கூறிய அறிவுரைகள் படி வாழ்க்கையை நடத்துபவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி வாழும் நபர்களில் சிலருக்கு அவர்களின் கர்ம வினை காரணமாக வாழ்வில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படவே செய்கிறது. அதிலும் குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் எதிரியாகி தீங்கு செய்யும் நிலை, கிரக தோஷங்கள் மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகளால் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை போன்றவை ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் விரைவில் போக்குவதற்கு வழிவகை செய்யும் வனதுர்க்கை ஹோமம் பூஜை செய்யும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Advertising
Advertising

நமது உடலுக்கு பிராண சக்தி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போன்று நமது ஆத்மாவிற்கு சக்தியாக இருக்கும் தெய்வமாக துர்க்கை அம்மன் இருக்கிறாள். அதிலும் வனங்களில் கோயில் கொண்டு வனதுர்க்கை அம்மனாக இருக்கும் தேவி மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். அந்த வன துர்க்கை அம்மனுக்கு ஹோம பூஜை செய்து வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி ஏற்றமிகு பலன்கள் ஏற்படும்.

வனதுர்க்கை ஹோமத்தை அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கொண்டு செய்வதே சாலச் சிறந்ததாகும். இந்த ஹோமத்தை வீட்டிலேயே செய்யலாம் அல்லது வனதுர்க்கை அம்மன் கோயிலில் உங்கள் பிறந்த ராசி, நட்சத்திரம் போன்றவற்றிற்கு உகந்த தினத்தில் செய்து கொள்ளலாம். துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமான வானதுர்கைக்குரிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் துதித்து ஹோமம் செய்யப்படுவதால் அப்பூஜையில் உங்கள் குடும்பத்தினர் அனைவருமே கலந்து கொள்வது அனைவருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

வனதுர்கை பாசுபத ஹோமம் செய்து கொள்வதால் உங்கள் எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் கிட்டும். அவர்களால் உங்களுக்கு செய்யப்பட்ட மாந்திரீக ஏவல்கள், செய்வினை போன்றவற்றை தடுக்கும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கின்ற தோஷங்கள் துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கும். மனோதிடம் மற்றும் தைரியம் அதிகரிக்கும். உங்கள் கோரிக்கைகள், விருப்பங்கள் யாவும் நிறைவேறும். மனம் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும் நவ கிரக தோஷங்களையும் போக்கி ஆயுளையும் அதிகரிக்கும்.

Related Stories: