சென்னை: பிச்சைக்காரன் வேடத்தில் கவின் நடித்துள்ள படம், ‘பிளடி பெக்கர்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்க, அவரது உதவியாளர் சிவபாலன் முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ளார். இது வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் நடித்துள்ளனர். படம் குறித்து சிவபாலன் முத்துக்குமார் கூறியதாவது: பொய் சொல்லி பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனின் கதை இது.
தன் கட்டுப்பாட்டுக்கு மீறிய ஒரு சூழ்நிலையில் சிக்கித்தவிக்கும் அவன், அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான்? இதன்மூலம் அவன் கற்ற பாடம் என்ன என்பது கதை. படம் முழுக்க பிச்சைக்காரனாக கவின் வர மாட்டார். அவரது கேரக்டர் பல்வேறு திருப்பங்களைக் கொண்டுள்ளது. பிச்சைக்காரன் வேடமணிந்த கவின், அதே கெட்டப்பில் ஆபீசுக்கு வெளியே சென்று பிச்சை எடுத்தார். அவருக்கு ஒரு அம்மா 20 ரூபாய் பிச்சை போட்டார். பிச்சைக்காரர்களைப் பற்றி தாழ்த்துவதாகவோ அல்லது உயர்த்துவதாகவோ இப்படத்தின் கதையும், காட்சிகளும் இருக்காது. தலைப்புக்கு இதுவரை எந்த தடையும் இல்லை.
The post பிளடி பெக்கர் பிச்சைக்காரர்களுக்கு எதிரான படமா? இயக்குனர் விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.