பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன்

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தை அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கினார். இதை தொடர்ந்து அவரது இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘டிராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார்.

லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் 3 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அடுத்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் கிரித்தி ஷெட்டியுடன் நடிக்கிறார்.

The post பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: